close
Choose your channels

சிவகார்த்திகேயன் வீட்டில் முக்கிய விசேஷம்.. உறவினர்கள் வருகை.. நெகிழ்ச்சியான வீடியோ..!

Monday, July 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் முக்கிய விசேஷம் நடந்துள்ள நிலையில் இந்த விசேஷத்தில் கலந்து கொள்ள அவருடைய உறவினர்கள் வருகை தந்தனர். இது குறித்த நெகிழ்ச்சியான வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தையும் குகன் என்ற ஆண் குழந்தையும் இருக்கும் நிலையில் கடந்த ஜூன் மாதம் மூன்றாவது குழந்தை பிறந்தது என்பதும், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியாக அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றதை அடுத்த இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் உங்களுடைய அனைவரது ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள் தேவை என்றும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் பெயர் சூட்டும் விழா குறித்த முக்கிய காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த நெகிழ்ச்சியான வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ’அமரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் ’டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment