'கனா' படத்தை பார்த்து திரையரங்கில் கண்ணீர் விட்ட சீனர்கள்: நன்றி கூறிய சிவகார்த்திகேயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய ’கனா’ திரைப்படம் சமீபத்தில் சீனாவில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் பல காட்சிகளை பார்த்த சீனர்கள் கண்ணீர் விட்டு அழுததாகவும் வெளிவந்திருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் சீனர்கள் கூறியபோது ’ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த படத்தை உணர்ச்சிவசப்பட்டு பார்த்தோம் என்றும் மன உறுதி, தந்தை மீதான பாசம், அப்பாவுடன் மோதல், கனவை நனவாக்க விடாமுயற்சி ஆகிய காட்சிகள் கண்ணீர் சிந்த வைத்தது என்றும், இந்தபடம் அனைவருக்கும் ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்றும் படம் பார்த்த சீன பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சீனாவை சேர்ந்த நிலானி என்ற பெண் தமிழில் இந்த படம் குறித்து வெளியிட்டுள்ள பத்து நிமிட வீடியோவுக்கு சிவகார்த்திகேயன் நன்றி கூறி பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதோ: நன்றி நிலானி உங்கள் தமிழிற்கும், சீனாவில் கனாவின் வரவேற்பு குறித்த உங்கள் பதிவிற்கும், சீனாவிலும் பலரை நெகிழச் செய்வது இந்த படத்தின் இன்னுமொரு மைல்கல்’ என்று தெரிவித்துள்ளார்.
நன்றி நிலானி உங்கள் தமிழிற்கும், சீனாவில் #கனா வின் வரவேற்பு குறித்த உங்கள் பதிவிற்கும்??❤️ சீனாவிலும் பலரை நெகிழச் செய்வது இந்த படத்தின் இன்னுமொரு மைல்கல்????
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 26, 2022
Thank you nilaani and thanks to everyone who watched #Kanaa in China ❤️??#KanaaInChinahttps://t.co/7GOxj2DGN9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments