முகுந்த் வரதராஜனாக மாறி மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்’ படத்தில் நடித்த முகுந்த் வரதராஜன் கேரக்டராக மாறி, தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான 'அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ.250 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது மனைவிக்கு பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அவர், 'அமரன்’ படத்தில் நடித்த முகுந்த் வரதராஜன் கேரக்டரில் திடீரென தனது மனைவியின் முன்னால் தோன்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார். முகுந்த் வரதராஜன் கெட்டப்பில் கணவரை பார்த்து ஆர்த்தி இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
இந்த காட்சியை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், மற்றும் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ’டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
Major Sivakarthikeyan 😍😍😍
— Sammy SK (@Sammy__SK) November 13, 2024
Anni Reaction 😍😍😍😍😍#Amaran #Sivakarthikeyan pic.twitter.com/O3uGhZNtMV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments