சதீஷ் வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,January 20 2022]

பிரபல காமெடி நடிகர் சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருப்பதால் திருப்திகரமான வசூல் கிடைத்துள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான ’நாய் சேகர்’ வெற்றியை ஒரு பக்கம் கொண்டாடும் நடிகர் சதீஷ்,  தற்போது தனது மகளின் முதலாவது பிறந்தநாளை இன்னொரு பக்கம் தனது வீட்டில் கொண்டாடியுள்ளார் 

நடிகர் சதீஷ் தனது குடும்பத்துடன் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்து சர்ப்ரைஸ் அளித்து உள்ளார். சதீஷ் மனைவி மற்றும் மகளுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.