கவின் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: ஆச்சரியமான அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் கவின் தற்போது ’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அதன் முதல்படியாக ’லிப்ட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியதாக நடிகர் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

’லிப்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’இன்னா மயிலு’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் அண்ணா அவர்கள் பாடியுள்ளதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என்றும் கவின் குறிப்பிட்டு உள்ளார்.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே ’கனா’ திரைப்படம் உட்பட ஒரு சில படங்களில் பாடி உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் நாளை வெளியாகி சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.