முதுகலை பட்டத்துடன் வெளியே வந்த கைதி.. சிவகார்த்திகேயன் அப்பா குறித்த நெகிழ்ச்சியான சம்பவம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா ஜெயில் சூப்ரெண்ட்டாக பணி செய்து கொண்டிருந்த நிலையில் அவர் பணியில் இருந்த போது படிப்பு வாசனையே இல்லாமல் சிறைக்கு வந்த கைதி ஒருவர் வெளியேறும் போது முதுகலை பட்டத்துடன் வெளியேறியுள்ளார். இன்று சிவகார்த்திகேயன் தந்தை ஜி தாஸ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் இது குறித்த தகவலை சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி.தாஸ் அவர்களின் மகன் சிவகார்த்திகேயன் என்று சொல்வது தான் பேரழகு. மேலே புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார்.
அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ். கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணி புரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார்.என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்றிதிருந்தார், அதற்கு காரணம் ஜி.தாஸ் அவர்கள்.
சிறைப்பறவைகளை என்றும் அடிக்க கூடாது, சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும், சிறைப்பறவைகளுக்கு கல்வியை புகுத்த வேண்டும். இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ். எல்லா தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு, அந்த மன்னிப்போடும் அன்பையும் கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார் ஜி.தாஸ். கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிழ்ந்தவர்.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம். கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவார். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா. மனித மனங்களை கொண்டாடுவோம்’ என தெரிவித்துள்ளார்.
Sharing our SK’s Watsapp status here
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 27, 2023
- Admin#DossAppa70thBirthday pic.twitter.com/J0vMuSRHpz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com