ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'டான்': டபுள் சென்சுரி அடித்த சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Sunday,May 22 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் திரையுலகையே ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான ’டான்’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’டான்’ திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது. இந்த படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.

இந்த நிலையில் இரண்டாவது வாரத்திலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வரும் ’டான்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’டாக்டர்’ ’டான்’ என வரிசையாக இரண்டு 100 கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்து சிவகார்த்திகேயன் டபுள் செஞ்சுரி அடித்து உள்ளார் என திரையுலக வட்டாரங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் இன்னொரு நடிகர்!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் மிஸ் செய்த பிக்பாஸ் டைட்டிலை தெலுங்கில் வென்ற பிரபல நடிகை!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை மிஸ் செய்த பிரபல நடிகை ஒருவர் தெலுங்கு பிக் பாஸ் நான்ஸ்டாப் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிட் பாடலை பாடிய பிரபல பாடகி 46 வயதில் மறைவு: திரையுலகினர் இரங்கல்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த ஹிட் பாடலை பாடிய பிரபல பாடகி 46 வயதில் காலமானதால் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அருண்ராஜா காமராஜின் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகர் ஹீரோவா?

'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது? கமல்ஹாசனா? சிம்புவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஐந்து சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகின், ஆரி மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர் டைட்டில்