சிம்புவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Saturday,April 07 2018]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்ட சிவகார்த்திகேயன் ஒருசில வருடங்களுக்கு முன் தான் சிம்பு படத்தில் பணியாற்றியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய 'வேட்டை மன்னன்' என்ற படத்தில் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாகவும், சிம்பு தான் பேசும் வசனங்களை முதலில் தன் முன்னர்தான் பேசிக்காட்டுவார் என்றும் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், ஒருசில காரணங்களால் அந்த படம் திடீரென நின்றுபோனது என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த படத்தால் தான் சிம்புவின் நண்பராகிவிட்டதாகவும் தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் சிம்பு தன்னை தொலைபேசியில் வாழ்த்து தெரிவிப்பார் என்றும் சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

'வேட்டை மன்னன்' இயக்குனர் நெல்சனும் சிவகார்த்திகேயனும் ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதும் மேலும் 'நெல்சன், தற்போது நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சி எஸ் கே மீது தமிழர்களுக்கு இருக்கும் தீராத காதல்

'ரமணா' திரைப்படத்தில் யூகி சேது ஒரு விஷயத்தை ஆணித்தரமாக பதிவு செய்வார்.

மணிப்பூர் முதல்வரை விட 35 லட்சம் அதிகம் வழங்கிய தமிழக முதல்வர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளது. மகளிர் 48 கிலோ பளுதூக்கும் போட்டியில்

புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை தானம் செய்த நடிகை

புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க பல பிரபலங்கள் தங்கள் தலைமுடியின் ஒரு பகுதியை தானம் செய்து வருவது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். நடிகை ஓவியாவும் இதற்காக தலைமுடியை கொடுத்தார் என்பது அறிந்ததே

காலா' அரசியல் படம் தான்: உண்மையை போட்டு உடைத்த நடிகை

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதால் அவர் நடித்து வெளியாகவுள்ள 'காலா' படத்தில் அரசியல் கலந்த பஞ்ச் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா! சூரப்பா குறித்து விவேக்கின் கவிதை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலையுறுத்தியும் கோலிவுட் திரையுலகினர் பலர் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.