வடிவேல் பாலாஜியுடனான மலரும் நினைவுகள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் கோளாறு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 15 தினங்களாக உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் ’அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

‘அது இது எது’ நிகழ்ச்சியில் எங்கள் இருவரின் கெமிஸ்ட்ரி மிகவும் சூப்பராக இருக்கும் என்று அந்த நிகழ்ச்சியின் இயக்குனரே கூறுவார். அவர் எங்களுக்கு அன்றைய தினத்தின் கான்செப்ட்டை ஒரே ஒரு வரி மட்டும்தான் கூறுவார். நாங்கள் இருவரும் தான் அதனை டெவலப் செய்வோம்.

ஒரு கான்செப்டை கொடுத்தால் உடனே மக்கள் ரசித்து சிரிக்க வைக்கும் வகையான டயலாக் அவரிடம் இருந்து வரும். அவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று கூறினார். அவருடன் பணிபுரிந்த ஜாலியான தருணங்கள் இன்று என் கண் முன் வருகிறது குறிப்பாக அவருடைய சிரிப்பை என்னால் மறக்கவே முடியாது என்று நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

More News

கடைசியா ஒருமுறை அவரை பார்க்க கூட முடியலையே: மைனா நந்தினி உருக்கம்

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி இன்று திடீரென உடல்நலக் குறைவால் காலமான செய்தி தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!!! எந்த மாவட்டத்திற்கு அதிக பாதிப்பு தெரியுமா???

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்

நீட் தேர்வுக்கு எப்படி செல்ல வேண்டும் தெரியுமா? தேசியத்தேர்வு முகமையின் புதிய அறிவிப்பு!!!

கொரோனா பரவல் தாக்குதலுக்கு இடையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் நடைபெற இருக்கிறது.

இரண்டாம் பாகமாக உருவாகும் ஷங்கரின் சூப்பர்ஹிட் திரைப்படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இந்த படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

கொரோனா சிகிச்சையில் கலக்கும் நம்ம ஊரு சித்த வைத்தியம்? பரபரப்பு தகவல்!!!

கொரோனா எனும் பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல் எப்போது வெளிவரும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.