close
Choose your channels

விஜய்சேதுபதி படத்தில் சிவகார்த்திகேயன்? 'மாவீரன்' வெற்றிவிழாவில் அவரே தெரிவித்த தகவல்..!

Thursday, July 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி அசரீரி குரல் கொடுத்த நிலையில் விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஆசை என ‘மாவீரன்’ வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டி 100 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடந்த நிலையில் இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ’விஜய் சேதுபதி அவர்களுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன், அனேகமாக அது விரைவில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் படம் இணையும் படத்தின் அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

மேலும் இயக்குனர் மடோன் அஸ்வின் விரும்பினால் அவருடன் இணைந்து இன்னொரு படத்தில் பணி புரிய காத்திருக்கிறேன் என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். எனவே ‘மாவீரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா? அல்லது இருவரும் இணையும் வேறொரு படம் விரைவில் அறிவிப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment