என் மகனுக்கு கண்டிப்பாக இதை சொல்லி கொடுப்பேன்: சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் மகனுக்கு நான் கண்டிப்பாக சொல்லிக் கொடுப்பேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளது அனைவரையும் பாராட்டும் வகையில் உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில், ஆண் குழந்தைகளிடம் பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால்தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது ’பெண்கள் பார்வையில் இந்த உலகம் இன்னும் அழகாக மாறுவது ஆண்கள் கையில் தான் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் மகனுக்கு சொல்லிக் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.