'7ஆம் அறிவு' முதல் '1947' வரை.. ஏ.ஆர்.முருகதாஸ் உடன் உள்ள கனெக்சன் குறித்து சிவகார்த்திகேயன்..!
- IndiaGlitz, [Tuesday,March 28 2023]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய '7ஆம் அறிவு’ முதல் தற்போது அவர் தயாரித்துள்ள ’1947’ படம் வரை தனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கியுள்ளார்
நேற்று நடைபெற்ற ’1947’ புரமோஷன் விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய போது ’ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’7ஆம் அறிவு’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்னால் தொகுப்பாளராக கலந்து கொள்ள முடியாமல் போனது. இருப்பினும் அந்த படத்தின் தொகுப்பாளர் பணிக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தது நான் தான் என்று கூறினார். அதன் பிறகு ஏஆர் முருகதாஸ் தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’ என்ற திரைப்படத்திற்கு தொகுப்பாளராக பணிபுரிந்தேன் என்றும் அதனை எடுத்து அவரது தயாரிப்பில் உருவான ’மான் கராத்தே’ திரைப்படத்தில் நான் ஹீரோவாக நடித்தேன் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது நான் அவர் தயாரித்த ’1947’ என்ற திரைப்படத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கின்றேன் என்றும் விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னுடன் இருப்பவர்களும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நினைக்கும் மிக சிலரில் ஏஆர் முருகதாஸ் அவர்களும் ஒருவர் என்றும் ’வீரம்’ படத்தில் அஜித் கூறியது போல் ’நம்மை சுற்றி உள்ளவர்களை நாம் காப்பாற்றினால் நம்மை கடவுள் காப்பாற்றுவார் என்பதுதான் ஏ ஆர் முருகதாஸின் கொள்கை’ என்றும் சிவகார்த்திகேயன் கூறினார்.