ரூ.100 கோடி வசூல் செய்த 'டாக்டர்': சிவகார்த்திகேயன் சம்பளம் இத்தனை கோடி உயர்வா?

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் சிவகார்த்திகேயன் திரையுலக வரலாற்றில் முதல் 100 கோடி ரூபாய் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து அவரது சம்பளமும் 5 கோடி உயர்ந்து விட்டதாக கூறப்படுவதால் கோலிவுட் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் நல்ல வசூல் செய்து விட்டால் உடனடியாக அந்த நடிகரின் சம்பளம் உயர்த்தப்படும் என்பதும் இது நடிகருக்கு மட்டுமின்றி நடிகைக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடி வசூல் செய்து உள்ளது என்பதும், ‘அண்ணாத்த’ ’எனிமி’ போன்ற தீபாவளி படங்கள் வெளியான போதிலும் ‘டாக்டர்’ படம் இன்னும் திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் வெற்றி காரணமாக சிவகார்த்திகேயன் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தைவிட 5 கோடி ரூபாய் அதிகமாக கேட்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் தற்போது நடித்து வரும் படங்களை தவிர புதிதாக ஒப்பந்தமாகும் திரைப்படங்களுக்கு ரூ.5 கோடி அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது படங்களுக்கு நல்ல ஒப்பனிங் இருப்பதால் தயாரிப்பாளர்கள் எத்தனை கோடி கேட்டாலும், அவருக்கு கொட்டிக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.