வேலைக்காரன்' ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன் எடுத்த முக்கிய முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவான வேலைக்காரன்' திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்ரு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனிமேல் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன்' என்பதுதான் அந்த முடிவு.
நான் நடிக்கும் விளம்பரங்கள் மூலம் சிறு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இனிமேல் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த விழாவில் பேசியதாவது:
தனி ஒருவன் படத்தை பார்த்ததும் டைரக்டரிடம் போனில் பேசினேன். இதுபோல் மிகவும் வலுவான கதை செய்யவேண்டும் என விரும்புவதாக கூறினேன். எனவே, மோகன் ராஜாவை நேரில் போய் பார்த்தேன். அவரும் என்னுடன் படம் செய்வதற்கு ஒப்புதல் தந்தார். இருவரும் சேர்ந்து அப்போதே வேலைக்காரன் என தலைப்பையும் தேர்வு செய்தோம். இந்த படத்தில் முழுக்க முழுக்க என்ன கிடைத்தாலும் இந்த பெருமை மோகன் ராஜாவையே சேரும்.
அனிருத் இல்லையென்றால் சிவகார்த்திகேயன் இல்லை என டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்து வருகிறேன். அந்த கருத்தில் எனக்கு பெருமை தான். எனது வாழ்க்கையில் பாதிக்கு மேல் உங்களுக்கு கொடுத்துள்ளேன், உங்களுக்கு இது 15-வது படம். ஆனால், இது எனக்கு 11வ-து படம். இந்த படத்துக்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
என்னை நல்ல மனிதனாக மாற்றிய படம் இது. அடித்தட்டு மக்களின் கேள்விகள், ஆசைகள் நடக்குமா என்பதை விளக்குவதே இந்த படம். இந்த படத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் வரும் பாடலின் வரிகளில், ஒரு முறையே வாழும் வாழ்க்கை, அதை பயனுறதாக்கு என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments