ரஜினியின் '2.0' படம் குறித்து சிவகார்த்திகேயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0; திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த படம் குறித்து பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:
இந்திய சினிமாவின் மேதைகளான ரஜினிகாந்த், ஷங்கர், அக்சயகுமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்டமான படம் '2.0'. இந்த படத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
இப்படி ஒரு பிரமாண்டமான படத்தை தயாரித்து மக்களுக்கு அளிக்க ஒரு தனி திறமையும் ஒரு நல்ல டீமும் தேவை. அந்த வகையில் லைகா நிறுவனத்திற்கு இப்படி ஒரு நல்ல டீம் அமைந்துள்ளது. லைகா நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
மேலும் லைகா நிறுவனத்தின் சுபாஷ் மற்றும் கருணாகரன் ஆகியோர்களுக்கு சினிமா மீது ஃபேஷன் இந்த படத்தின் மூலம் தெரிகிறது. ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து வந்த கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு தமிழ்ப்படத்தில் இருப்பது நமக்கு பெருமையாக உள்ளது. இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது. எனக்கும் அந்த உத்வேகம் ஏற்பட்டது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
We have a star who always adored super star and took inspiration from him and his movies! Here is @Siva_Kartikeyan who wishes his best to #2Point0!@2Point0movie #2Point0FromNov29 @rajinikanth @akshaykumar @shankarshanmugh @arrahman @iamAmyJackson @editoranthony @LycamobileUK pic.twitter.com/Ci0VPJpU4J
— Lyca Productions (@LycaProductions) November 24, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments