'இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்': சிவகார்த்திகேயனின் 'அமரன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,October 23 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர், முதல் முறையாக பார்க்கும் போது, படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுத்தி வருகிறது என்று கமெண்ட்களில் குவிந்து வருகிறது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில், மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டர், அன்பான மனைவி, அழகான குழந்தை, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வது, தீவிரவாதிகளை எதிர்ப்பது, ஒரு போர் வீரனுக்கு ஏற்படும் சவால்கள், இந்தியாவின் முதுகெலும்பான ராணுவத்தின் பெருமை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனால், இந்த படம் ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமின்றி, ராணுவத்தின் பெருமையை உணர்த்தும் படமாகவும் இருக்கிறது என்பதும் இந்த இரண்டு நிமிட ட்ரைலரிலிருந்து தெரிகிறது.

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் சாய் ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

'வேட்டையன்' சப்வே ஃபைட் படமாக்கப்பட்டது எப்படி? மாஸ் வீடியோவை வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அன்சீன் காட்சிகள் உட்பட சில வீடியோக்களை

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர்.. செம்ம த்ரில்லர் படமா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறி உள்ள நிலையில், அவர் தற்போது சில பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்

சன் டிவியின் பிரபல 2ஆம் பாக தொடர் முடிவுக்கு வருகிறதா?  கிளைமாக்ஸ் படப்பிடிப்பு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இரண்டாம் பாகம் தொடர் விரைவில் முடிவடைய இருப்பதாகவும், இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு சிக்கல் வந்தால்? விஜய்யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு உதவுவதற்காக

தமிழில் ஒரு 'பாகுபலி'யா? 'கங்குவா' படத்திற்கு பிரபலம் கொடுத்த விமர்சனம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்