சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,June 03 2019]

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது நான்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமாருடன் ஒரு படம், 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் என படுபிசியாக உள்ளார்.

இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தயாரித்த இரண்டாவது படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படத்தை 'அருவி' பட இயக்குனர் அருண்பிரபு இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் குறித்த கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் தனது முந்தைய படமான 'மிஸ்டர் லோக்கல்' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இனிவரும் தனது படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை பெறும் என்றும், 'நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா' என்ற பஞ்ச் உடன் தனது பேச்சை முடித்து கொண்டார்

More News

அழகிய தீர்வு: மத்திய அரசின் மாற்று முடிவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு!

இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிக்க புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

பிறந்த நாளில் இசைஞானி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதுதான்!

இளையராஜா நேற்று தனது 76வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். கமல்ஹாசன் உள்பட பல பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

இந்தி எதிர்ப்பை புத்திசாலித்தனமான புரமோஷனில் காட்டிய 'கொரில்லா' படக்குழு

தேர்தல் முடிந்துவிட்டதால் அரசியல்வாதிகளுக்கு போராட்டம் செய்யவும், அறிக்கை விடவும் காரணம் இன்றி தவித்த நிலையில் அவர்களுக்கு கைகொடுத்த விவகாரம் தான்

இந்தி எதிர்ப்பை வித்தியாசமாக தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

'காலா 2' படம் குறித்து பா.ரஞ்சித்தின் முக்கிய அறிவிப்பு

நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமாவிலும் தலித் அரசியல் பேசும் இயக்குனர் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார்