என் தங்கச்சிக்கு மார்க் கொஞ்சம் பாத்து போடுங்க: சூப்பர் சிங்கர் ஜட்ஜ்களிடம் சிவகார்த்திகேயன் கோரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ஒருவரை பார்த்து இவர் என் தங்கச்சி, மார்க்கை கொஞ்சம் பார்த்து போடுங்க என ஜட்ஜ்களிடம் சிவகார்த்திகேயன் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இதில் பாடகர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் வரும் வாரம் தல ,தளபதி படங்களிலிருந்து பாடல்களை போட்டியாளர்கள் பாடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட பாடகர்களில் ஒருவர் தன்சீரா. இவர் சிவகார்த்திகேயன் மிக தீவிரமான ரசிகை என்பதை தெரிந்து கொண்ட விஜய் டிவி குழுவினர் அவரை சஸ்பென்ஸ் ஆக சிவகார்த்திகேயனிடம் அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
சிவகார்த்திகேயனை பார்த்தவுடன் துள்ளி குதித்து கட்டிப்பிடித்துக் கொண்ட ரசிகை தன்சீராவுடன் சிறிது நேரம் உரையாடிய சிவகார்த்திகேயன், அதன்பின்னர் சூப்பர் சிங்கர் ஜட்ஜ்களிடம் 'இது என் தங்கச்சி, எனவே மார்க்கை கொஞ்சம் பார்த்து போடுங்க’ என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நெகிழ்ச்சியான தருணம்..❤️ பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV pic.twitter.com/68jDxrTUp8
— Vijay Television (@vijaytelevision) February 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments