close
Choose your channels

'ரெமோ' படத்தின் புத்திசாலித்தனமான ரிலீஸ் தேதி

Friday, July 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் எந்த அளவு புத்திசாலித்தனம் இருக்கின்றதோ, அதேபோல் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதிலும் படக்குழுவினர் முக்கிய அக்கறை காட்ட வேண்டும் என்பது கோலிவுட்டின் முக்கிய விதிகளில் ஒன்று. நல்ல படங்கள் கூட சரியான ரிலீஸ் தேதியை முடிவு செய்யாததால் தோல்வி அடைந்த வரலாறு இங்கே உண்டு.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தின் ரிலீஸ் தேதியை மிகவும் புத்திசாலித்தனமாக படக்குழுவினர் தற்போது முடிவு செய்துள்ளனர். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு பின்னர் சனி, ஞாயிறு வார விடுமுறையும் அதன் பின்னர் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஆயுத பூஜை விடுமுறையும், புதனில் மொஹரம் விடுமுறையும் வருவதால் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஆறு நாட்கள் மிகப்பெரிய அளவில் வசூல் செய்ய வாய்ப்பு உள்ளது. 'ரெமோ' குழுவினர்களின் இந்த புத்திசாலித்தனமான ரிலீஸ் தேதியால் இந்த படத்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment