'ரெமோ' பிசினஸ் ஆரம்பம். முதல்போனி கோவையில்!!!

  • IndiaGlitz, [Friday,August 05 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கும் என 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் முதல்கட்டமாக இந்த படத்தின் கோவை பகுதியின் ரிலீஸ் உரிமையை சீனியர் விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மிகப்பெரிய தொகை கொடுத்து வியாபாரத்தை தொடங்கி வைத்துள்ளார். கோவையை அடுத்து மற்ற பகுதிகளின் ரிலீஸ் உரிமை குறித்த வியாபாரங்களின் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் இதுகுறித்த விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். நர்ஸ் உள்பட பல்வேறு கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சீயான் விக்ரமின் மிகப்பெரிய பிசினஸ் இதுதான்

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அனைத்து எப்.எம் வானொலிகளில்...

'பாகுபலி 2' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்...

மலேசியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'கபாலி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் வசூல் குறித்து...

முதல்முறையாக இணையும் சிம்பு-பிரபுதேவா

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிம்புவும், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற புகழுடன் நடிப்பு...

ஒரே நாளில் இரண்டு 'திருநாள்' கொண்டாடும் ஜீவா

கிராமத்து ரெளடி 'பிளேடு' பாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள 'திருநாள்' இன்று வெளியாகிறது. கடந்த சில வருடங்களாக இறக்கத்தில் இருந்து வரும் ஜீவாவுக்கு...