சிவகார்த்திகேயனின் பெண்குரல் ரகசியத்தை வெளியிட்ட ரசூல்பூக்குட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல சவுண்ட் எஞ்சினியர் ரசூல்பூக்குட்டியின் மேற்பார்வையில் 'ரெமோ' படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடித்துள்ளதால் அந்த பெண் வேடத்திற்குரிய டப்பிங்கை சிவகார்த்திகேயனே மிமிக்ரி செய்து பெண் குரலில் பேசியதாகவும், ஆனால் அது சரியாக வராததால் அவரை இயல்பாக பேச வைத்து ஒருசில சாப்ட்வேர் மூலம் அந்த குரலை பெண் குரலாக மாற்றவுள்ளதாகவும் ரசூல் பூக்குட்டி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சுமார் 50 நிமிட காட்சியில் பெண்ணாக தோன்றுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments