சிவகார்த்திகேயனின் ரெமோவில் இணையும் நடிகரின் மகள்

  • IndiaGlitz, [Thursday,February 18 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தில் பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா முக்கிய வேடத்திலும் விஜய்யின் மகள் திவ்யா கிளைமாக்ஸ் காட்சிகளிலும் நடித்ததாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'ரெமோ' படத்தில் நடிகர் ஒருவரின் மகள் நடித்து வருவதாக செய்தி வெளிவந்துள்ளது.


நடிகர் மற்றும் பாடகர் ஷ்யாமின் இளையமகள் ரக்ஷா, 'ரெமோ' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நைனிகா மற்றும் திவ்யாவை போலவே ரக்ஷாவும் இந்த படத்தில்தான் முதல்முதலாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.