'ரெமோ' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,September 28 2016]

இதுவரை இல்லாத அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன் நடித்த படமான 'ரெமோ' சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அக்டோபர் 7 என தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சற்று முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இந்த படத்தை தயாரித்த 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக இணையதளத்தில் வெளிவந்துள்ளது.
எனவே உலகம் முழுவதும் 'ரெமோ' அக்டோபர் 7ல் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
நர்ஸ் உள்பட பல்வேறு கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிமுருகன்' படத்திற்கு பின்னர் மீண்டும் கீர்த்திசுரேஷ் ஜோடி சேர்ந்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயகக்த்தில் அனிருத் இசையில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம்

கோலிவுட் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இழப்பையே திரையுலகினர் இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில் மற்றொரு இளம் பாடலாசிரியரான அண்ணாமல் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அஜித்-விஜய் இணையும் 'மங்காத்தா 2' கதை இதுதானா?

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய 'மங்காத்தா' என்ற வெற்றி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமின்றி...

ரஜினி, அஜித்துக்கு பிறகு அழகானவர் என் மாப்ளேதான் : ராதாரவி

பிரபல நடிகர் ராதாரவி மேடையில் பேசும்போது கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர்...

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு சென்சாரில் இருந்து கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது...

Sivakarthikeyan's 'Remo' gets positive result from Censor

Yes... as expected and as desired by everyone, Sivakarthikeyan's most anticipated flick 'Remo' has cleared the Censor test with a clean U certificate...