உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகும் 'ராபர்' .. சிவகார்த்திகேயன் வெளியிட்ட போஸ்டர்..!

  • IndiaGlitz, [Saturday,April 27 2024]

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன். சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன. மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது . நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறான். 'உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே' என்றார் புத்தர். நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களை பாதிக்கின்றன' என்கிறது தம்மபதம். நாயகனின் ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம்.அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான். நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதே 'ராபர்' படத்தின் கதை.

'ராபர்' படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து தயாரிப்பாளர் கவிதா கூறியபோது, ‘உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகள் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும். 'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.

இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன். நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாக குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் ,சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.

’ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் பர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மே மாதத்தின் இறுதியில் ராபர் படம் வெளியாகவுள்ளது.

More News

இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட சங்கடம் தீரும் (சித்திரை 14, ஏப்ரல் 27)

சென்னை, ஏப்ரல் 27: இன்று சித்திரை மாதம் 14 ஆம் தேதி, சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில் விநாயகரை வழிபட்டால், சகல துன்பங்களும் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.

விஜய் பிறந்த நாளில் வரும் 'கோட்' அப்டேட் இதுதான்.. ரசிகர்கள் உற்சாகம்..!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

மே 1ஆம் தேதி அஜித்தின் 2 படங்கள் ரீரிலீஸ்.. ஆனாலும் 'மங்காத்தா' மிஸ் ஆகுதே..!

விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அஜித் ரசிகர்களும் 'பில்லா' 'மங்காத்தா' உட்பட சில படங்களை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை

நம்ம எல்லாரையும் பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், நாம் தான் உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: 'ஸ்டார்' டிரைலர்..!

'ஒரு நடிகன் தனது நடிப்பு திறமையால் தன்னை எல்லாரையும் மறக்கடிக்க முடியும், நீ நடிக்கிற நடிப்புல பாக்குறவங்க எல்லாம் உன் மீசையை மறந்துடனும், நீ மட்டும் உன் மீசைய மறைச்சுட்டா, நீ நடிப்புல ஜெயிச்சுட்ட'

விக்ரமின் சம்பவம் ஆரம்பம்.. 'வீர தீர சூரன்' முதல் நாள் படப்பிடிப்பு வீடியோ..! யார் யார் கலந்து கொண்டார்கள்?

விக்ரம் நடிக்க இருக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் மூன்று நிமிடம் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது