பாலசரவணன் ஹீரோ.. 'விக்ரம்' நடிகை ஹீரோயின்.. உதவி செய்த சிவகார்த்திகேயன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் சிலர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது காமெடி நடிகர் பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களான சந்தானம், சூரி, சதீஷ் உட்பட பலர் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் நடிகர் பாலசரவணனும் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
‘பேச்சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பாலசரவாணன் மற்றும் ’விக்ரம்’ உள்பட பல படங்களில் நடித்த காயத்ரி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் தேவ ராம்நாத் உள்பட சிலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை ராமச்சந்திரன் எழுதி இயக்க, ராஜேஷ் முருகேசன் இசையில், பார்த்திபன் ஒளிப்பதிவில், குமார் கலை இயக்கத்தில், ப்ரீத்தி நெடுமாறன் காஸ்ட்யூம் டிசைனில் உருவாகி வருகிறது. கோகுல் பினாய் என்பவர் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் வரும் ஜூலை மாதம் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக எனது அருமை தம்பி பாலசரவணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த பர்ஸ்ட் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy to release the first-look poster of the folklore horror film #பேச்சி.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 15, 2024
Best wishes to my dear brother @Bala_actor and the entire team for a huge success 😊👍@SGayathrie @devRamnath @rockraamz @RajeshMRadio @Veyilonent @Verusproduction @filmmaker2015 @ignatiousaswin… pic.twitter.com/M0Va7BZtwa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments