உலகின் தலைசிறந்த சொல்லை செய்து காட்டுவோம்: சிவகார்த்திகேயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் தாக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் கொரோனாவின் சீரியஸ் குறித்து இன்னும் பலர் அறியாமல் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து பல பிரபலங்கள் பொதுமக்களுக்கு ஏற்கனவே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில் சற்று முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக தன்னலமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். அதனை நாம் செயல்படுத்த வேண்டும்.
இன்னும் இந்த கொரோனா சீரியஸ் புரியாமல் நிறைய பேர் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்காகத்தான் இந்த வீடியோவை நான் வெளியிட்டேன். அதில் 10 பேர் இந்த வீடியோவை பார்த்து திருந்தி வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால் எனக்கு சந்தோசமே. எனவே நாம் அனைவரும் வீட்டுக்கு உள்ளே இருப்போம். வீட்டிற்குள் இருக்கும் போது நம்மை நாம் பாதுகாப்பதற்காக பல விஷயங்களை சொல்லி இருக்கின்றார்கள். அதனை பின்பற்றுங்கள். இருப்பினும் முதல்படி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது தான். இதை செய்தால் நிச்சயம் நாம் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம். நான் எப்போதும் நம்புவது ஒன்றே ஒன்று தான். உலகின் தலைசிறந்த சொல் செயல். அதனை செய்து காட்டுவோம்.
இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
#StayHomeStaySafe#Corona
— PIB in Tamil Nadu ???? #StayHome #StaySafe (@pibchennai) April 22, 2020
Salute our #CoronaWarriors @Siva_Kartikeyan @Arunrajakamaraj @PIB_India @airnews_Chennai @DDNewsChennai @ROBCHENNAI_MIB pic.twitter.com/hONpcS7b2D
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com