சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற வெற்றி பட இயக்குனர்!

  • IndiaGlitz, [Friday,October 02 2020]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி நடித்து வரும் அடுத்த திரைப்படம் ’சத்திய சோதனை’ என்பதும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இயக்குனர் சுரேஷ் சங்கையா மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய ’ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அதேபோல் இந்த திரைப்படமும் வெற்றி அடைய தனது வாழ்த்துக்கள் என்றும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

பிரேம்ஜி அமரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு சரண் ஒளிப்பதிவு, வெங்கட்ராஜன் படத்தொகுப்பு, ரகுராம் இசையமைப்பு பணியையும் செய்துள்ளனர். இந்த படத்தை சமீர் பரத்ராம் தயாரித்துள்ளார்.