close
Choose your channels

'டார்லிங் 2' படக்குழுவினர்களுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

Saturday, February 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ரிலீஸான 'ரஜினிமுருகன்' படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை நட்சத்திர அந்தஸ்து உடைய நாயகனாக மாற்றிவிட்டது. சமீபத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று' திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'டார்லிங் 2' படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை இன்று வெளியிடவுள்ளார்.


'மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் ஹீரோவாக நடித்து வரும் 'டார்லிங் 2' திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராதான் என்பவர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான 'மச்சான் வாடா நீதான் ஃபிரெண்டு' என்ற புரமோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் வெளியிடவுள்ளார்.

கலையரசன், ரமேஷ் ராஜா, மாயா, காளிவெங்கட், உள்பட பலர் நடித்துள்ள இந்த படமும் டார்லிங் படம் போலவே த்ரில் படம் என்று கூறப்படுகிறது. முதலில் இந்த படத்திற்கு 'ஜின்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பரிந்துரையின் பேரில் இந்த படத்திற்கு 'டார்லிங் 2' என டைட்டில் மாற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment