விஷாலுடன் இணையும் சிவகார்த்திகேயன்?

  • IndiaGlitz, [Wednesday,August 26 2015]

பூஜை, ஆம்பள படங்களை அடுத்து விஷால் தனது 'பாயும் புலி' படத்தை வரும் செப்டம்பர் 4ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறார். விஷால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்த இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். பாண்டியநாடு' வெற்றிப்படத்தை அடுத்து விஷால்-சுசீந்திரன் இணையும் அடுத்த படம் இது என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில் விஜய்யின் 'புலி' பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதால், செப்டம்பர் 17ஆம் தேதியை ஜி.வி.பிரகாஷின் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா, சிவகார்த்திகேயனின் 'ரஜினிமுருகன்' ஆகிய படங்கள் ஆக்கிரமித்து கொண்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் 'புலி' ரிலீஸாக இருந்த தேதியை கைப்பற்றிய சிவகார்த்திகேயன், தற்போது 'பாயும் புலி' ரிலீசாகும் தேதியில் அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி 'ரஜினி முருகன்' படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி, பேராசிரியர் ஞானசம்பந்தம், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. மான்கராத்தே, காக்கி சட்டை படங்களை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

எம்.ராஜேஷின் அடுத்த பட டைட்டில்?

இயக்குனர் எம்.ராஜேஷ் படங்களுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருக்கும்....

'புலி' பட ரிலீஸ் தாமதம் ஏன்? ஆர்யா விளக்கம்

விஜய் நடித்த புலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்பது அனைவரும் தெரிந்ததே...

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கடந்த 1980-90களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் உச்சத்தில் இருந்தபோது "இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்காந்த். ரஜினிக்கு பிறகு கோலிவுட்டில் ஜெயித்த கருப்பு நடிகர் இவர் மட்டுமே.....

இந்திக்கு செல்கிறது விஜய்யின் 'டாடி மம்மி''

இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வில்லு'. இளையதளபதி விஜய்,...

விஜய்-சங்கீதா தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து

கடந்த சில நாட்களாக இளையதளபதி விஜய் குறித்து எந்த செய்தி வந்தாலும் அது உடனே சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது....