close
Choose your channels

'ரஜினிமுருகன்' படத்தின் சென்சார் விபரங்கள்

Thursday, September 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர் நடித்துள்ள 'ரஜினிமுருகன்' படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


'ரஜினிமுருகன்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் ஒரு காட்சியையும் கட் செய்யாமல் படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு இணையத்தில் வெளியாகவுள்ளது. இதுவரை அஜீத், விஜய் படங்களின் டிரைலர்கள் மட்டுமே நள்ளிரவில் வெளியாகி வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் டிரைலரும் நள்ளிரவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி, பேராசிரியர் ஞானசம்பந்தம், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment