'ரஜினிமுருகன்' படத்தின் சென்சார் விபரங்கள்

  • IndiaGlitz, [Thursday,September 03 2015]

இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர் நடித்துள்ள 'ரஜினிமுருகன்' படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


'ரஜினிமுருகன்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் ஒரு காட்சியையும் கட் செய்யாமல் படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு இணையத்தில் வெளியாகவுள்ளது. இதுவரை அஜீத், விஜய் படங்களின் டிரைலர்கள் மட்டுமே நள்ளிரவில் வெளியாகி வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் டிரைலரும் நள்ளிரவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி, பேராசிரியர் ஞானசம்பந்தம், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீவா, கார்த்திகா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது....

'தூங்காவனம்' டிரைலர் ரிலீஸ் தேதி. கவுதமி அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

அஜீத் 56 படத்தின் மாஸ் டைட்டில்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' என்று அழைக்கப்படும் திரைப்படத்திற்கு இன்னும்...

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கவுண்டமணி?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சுந்தர் சியின் அரண்மனையை கைப்பற்றிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

மறைந்த பிரபல இயக்குனர் இராம.நாராயணன் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்தும்...