சத்யராஜ் மகளின் முக்கிய தகவலை புரமோஷன் செய்த சிவகார்த்திகேயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பது தெரிந்ததே. இந்த லாக்டவுன் நேரத்தில் மருந்துகள் வாங்கும்போது கவனமாக இருப்பது குறித்தும், காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும் என்பது குறித்தும் சமீபத்தில் திவ்யா சத்யராஜ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சத்யராஜ் மகள் திவ்யா கூறிய விழிப்புணர்வு தகவல் இதுதான்:
"லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம். மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்த பின்னரே வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், க்ரீம், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம்.
மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்... மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும்".
இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments