முடிவுக்கு வந்தது சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர்கள் பாண்டிராஜ், விக்னேஷ் சிவன், மற்றும் ரவிக்குமார் ஆகியவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 'கனா' மற்றும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'வாழ்'. 'அருவி' இயக்குனர் அருண் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
75 நாட்களில் சுமார் 100 லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருப்பதாகவும், இசைக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சுமார் பத்து பாடல்கள் இருப்பதாகவும் பிரதீப் குமார் இசையில் உருவாகியிருக்கும் அனைத்து பாடல்களும் இசை விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். 'அருவி' போன்ற ஒரு தரமான படத்தை மீண்டும் அருண்பிரபு தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
That's a wrap up for our #Vaazhl after 75 days of shoot in 100+ locations. Post production going on in full swing ??#VaazhlWrapUp@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @thambiprabu89 | @shelley_calist | @pradeepvijay | @raymondcrasta | @dhilipaction | @madhuramoffl | @DoneChannel1 pic.twitter.com/XU63mVboAU
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 15, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments