சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த மாஸ் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,August 30 2022]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பிரின்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை அனுதீப் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் உக்ரைன் நாட்டின் நடிகை மரியா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு முதல் முறையாக தமன் இசையமைத்து வரும் நிலையில் இந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை அறிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மேலும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் எனவும், இந்த படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.