சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' சாட்டிலைட், டிஜிட்டல் இத்தனை கோடியா? பட்ஜெட்டை விட அதிகமா இருக்கே!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை டிஸ்னி ஹாட்ச்டார் மற்றும் விஜய் டிவி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து 42 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘பிரின்ஸ்’ படத்தின் மொத்த பட்ஜெட்டே 30 முதல் 40 கோடி என்று கூறப்படும் நிலையில் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை வியாபாரம் மட்டுமே பட்ஜெட்டைவிட அதிகமாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதை அடுத்தே ‘பிரின்ஸ்’ படத்தின் வியாபாரம் உச்சத்திற்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments