சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹாட்ரிக் வெற்றி கூட்டணி

  • IndiaGlitz, [Tuesday,August 16 2016]

சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்று கூறினால் அது மிகையாகாது. இந்த படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனுக்கு மட்டுமின்றி ஸ்ரீதிவ்யா, இயக்குனர் பொன்ராம் ஆகியோர்களுக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் இயக்குனர் பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான இரண்டாவது படமான 'ரஜினிமுருகன்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது.\
இந்நிலையில் இதே கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளதாகவும், இந்த படம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பொன்ராம் தனது சமூக வலைத்தளத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் இயக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், வரும் 2017ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More News

விஜய்-அட்லி இணையும் படம் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலிலும் தெறிக்க வைத்தது...

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி; ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் அறிவிப்பு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

சென்னையில் 'கபாலி'யின் வசூல் நிலவரம்

சென்னையில் 'கபாலி' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் 15 திரையரங்குகளில் 110 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.27,01,440 வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகெயனின் 'ரெமோ'

சிவகார்த்திகேயன் முதன்முதலாக நர்ஸ் உள்பட பல வித்தியாசமான வேடங்களில் நடித்த 'ரெமோ' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை தவிடுபொடியாக்கி வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.