வேஷ்டி சட்டையில் சிவகார்த்திகேயன் மகன்.. செம க்யூட் புகைப்படம்

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவக்கார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அதில் இருக்கும் சிவகார்த்திகேயன் மகன் புகைப்படம் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ் திரை உலக பிரபலங்கள் பொங்கல் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

கடந்த ஆண்டு பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை அவர் பதிவு செய்த போது அவரது மகன் கைக்குழந்தையாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அவர் வேஷ்டி சட்டையுடன் புன்சிரிப்புடன் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர், அதேபோல் சிவகார்த்திகேயன் மகளும் இந்த ஒரு வருடத்தில் நல்ல மாற்றத்தில் உள்ளார். மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் மகிழ்ச்சியான குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அவர் நடித்து முடித்துள்ள ’அயலான்’ திரைப்படமும் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.