முதலாளி ஆகும் சூரிக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Wednesday,November 01 2017]

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு பொருத்தமான காமெடி நடிகர்கள் கோலிவுட் திரையுலகில் தானாகவே அமைந்துவிடும். அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு அமைந்த சிறப்பான காமெடி நடிகர் சூரி.

சிவகார்த்திகேயன் -சூரி இணைந்து நடித்த 'மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினிமுருகன், போன்ற படங்கள் சூப்பர் ஹிட் என்பது அனைவரும் தெரிந்ததே. தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் சூரி, தன்னுடைய சகோதரருக்காக மதுரையில் உணவகம் ஒன்றை இன்னும் சிலநாட்களில் துவங்கவுள்ளார். அந்த உணவகத்தை துவங்கி வைப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை சென்று நடிகர் சூரியின் உணவத்தை துவக்கி வைத்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. திரையில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதையே இது காட்டுகிறது.

More News

'தளபதி 62' ஹீரோயின் யார்?

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் மூன்றாவது வாரத்திலும் மெர்சலான வசூலை தந்து கொண்டிருக்கின்றது. விஜய்யின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக 'மெர்சல்' அமைந்துள்ள நிலையில் 'தளபதி 62' திரைப்படத்தின்

வேலைக்காரனின் 2இன்1 சர்ப்ரைஸ் இதுதான்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் 2இன்1 சர்ப்ரைஸ் இன்று மாலை வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

'அமலாபால்' கார் வாங்கியதில் விதிமீறல் இல்லை: புதுவை அமைச்சர் பேட்டி

நடிகை அமலாபால் புதுச்சேரி முகவரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நஸ்ரியாவின் ரீஎண்ட்ரி உண்மையா? அவரே அளித்த விளக்கம்

நடிகை நஸ்ரியா கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும்போதே மலையாள நடிகை பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி, இல்லற வாழ்க்கையில் மூழ்கினார்.

டிரம்ப் கட்சியின் கொ.ப.செ ஆக கஸ்தூரி?

கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி விரைவில் திமுகவில் சேரவிருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.