close
Choose your channels

அட்லியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

Wednesday, September 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படம் 'யூ' சர்டிபிகேட் பெற்று நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனை இயக்கும் அடுத்த இயக்குனர் இளையதளபதி விஜய்யை இயக்கி வரும் அட்லி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அட்லி இயக்கி வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் மேல் நிறைவு பெற்றதை அடுத்து இந்த படத்தை முடித்தவுடன் அவர், சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

அட்லி-சிவகார்த்திகேயன் இணையும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணிபுரிவார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பாக்யராஜ் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்திலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment