பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்
- IndiaGlitz, [Thursday,March 21 2019]
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கடந்த ஆண்டே தகவல் வந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா, பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த பிரமாண்ட கூட்டணியில் அனிருத்தும் இணைகிறார். எனவே இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாகும் என்று இப்போதே உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் 17வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு ஜூலையில் தொடங்கி அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த இரண்டு படங்களை இயக்குனர்கள் ரவிகுமார் மற்றும் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இணையும் இன்னொரு படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது