close
Choose your channels

'தனி ஒருவன்' இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

Friday, December 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் 'தனி ஒருவன்' என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஜெயம் ராஜா விஜய்யின் 60வது படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இருந்தார். ஆனால் விஜய்யின் 60வது படத்தை பரதன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் 'தனி ஒருவன்' படத்தின் இந்தி அல்லது தெலுங்கு ரீமேக் படத்தை ஜெயம் ராஜா இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.


24 AM Studios நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தை ஜெயம் ராஜா இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த படமும் 'தனி ஒருவன்' படத்தை போலவே ஜெயம் ராஜாவின் கற்பனையில் உதித்த சொந்தக்கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு காமெடி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment