close
Choose your channels

எம்ஜிஆர் பாடல் வரியை டைட்டிலாக தேர்வு செய்த சிவகார்த்திகேயன்!

Thursday, February 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான 'கனா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த தயாரிப்பு படத்தில் தொலைக்காட்சி புகழ் ரியோராஜ் நடித்து வந்தது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுடன்' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. எம்.ஜிஆர் நடித்த 'என் அண்ணன்' படத்தில் இடம்பெற்ற பாடல் வரியே இந்த டைட்டில் என்பதும் இதே டைட்டிலில் ராமராஜன் நடித்த படம் ஒன்று வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதே டைட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜீவா நடிக்கும் படம் ஒன்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ ராஜ், ஷ்ரின், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment