எம்ஜிஆர் பாடல் வரியை டைட்டிலாக தேர்வு செய்த சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Thursday,February 21 2019]

சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான 'கனா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த தயாரிப்பு படத்தில் தொலைக்காட்சி புகழ் ரியோராஜ் நடித்து வந்தது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுடன்' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. எம்.ஜிஆர் நடித்த 'என் அண்ணன்' படத்தில் இடம்பெற்ற பாடல் வரியே இந்த டைட்டில் என்பதும் இதே டைட்டிலில் ராமராஜன் நடித்த படம் ஒன்று வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதே டைட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜீவா நடிக்கும் படம் ஒன்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ ராஜ், ஷ்ரின், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

இன்று முதல் ஸ்ருதியை அதிகப்படுத்தவுள்ளேன்: ஓராண்டு விழாவில் கமல் பேச்சு

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு இதே நாளில்தான் நடிகர் கமல்ஹாசன் மதுரையில் தொண்டங்கினார். இக்கட்சி ஒரு வருடத்தை பூர்த்தி செய்த நிலையில்

'சூப்பர் டீலக்ஸ்' குறித்து சமந்தாவின் முக்கிய அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக இணைந்து சமந்தா நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் 50வது நாளை நோக்கி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

சீமானுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்-தயாரிப்பாளர்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படம் விஜய்யின் 'சர்கார்' படத்துடன் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே

உலகிலேயே இவர்தான் மோசமானவர்: பிரபல இயக்குனர் குறித்து ஸ்ரீரெட்டி

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதில்