சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் 'தெறி' கனெக்சன்?

  • IndiaGlitz, [Saturday,September 22 2018]

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் கலவையான விமர்சனத்தையும் தாண்டி இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் - எம்.ராஜேஷ் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த 'தெறி' படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டான பாடல் என்பதும், இந்த பாடலின் முதல் வரி சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.