சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் ’டான்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ’டாக்டர்’ படமும் அதன் பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து ’அயலான்’ திரைப்படமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Super excited to announce our next film, #DON?? in association with @LycaProductions starring our very own @Siva_Kartikeyan, to be directed by debutant @Dir_Cibi & music by none other than our 'Rockstar' @anirudhofficial ??@KalaiArasu_ pic.twitter.com/Ja33UvCwwV
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) January 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments