சிவகார்த்திகேயன் - 'அருவி' அருண்பிரபு படத்தின் குழுவினர் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,June 03 2019]

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான 'கனா' சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து அவர் தயாரித்த இரண்டாம் தயாரிப்பு திரைப்படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தனது மூன்றாவது தயாரிப்பு குறித்த அறிவித்த சிவகார்த்திகேயன், இந்த படத்தை 'அருவி' இயக்குனர் அருண்பிரபு இயக்குவார் என்று கூறினார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் அருண்பிரபுவும் இணையும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஷெல்லி ஒளிப்பதிவும், ரெய்மண்ட் கிராஸ்டா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். இவர்கள் இருவரும் அருண்பிரபுவின் 'அருவி' படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயனும், வசனகர்த்தாவாக குட்டிரேவதியும் பணிபுரியவுள்ளனர்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கி கூடிய விரைவில் படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. அருண்பிரபுவின் இந்த படமும் 'அருவி' போல் வெற்றியடைய நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

தம்பியை தூக்கில் தொங்கவிட்ட தந்தை, மொபைல் போனில் படம்பிடித்த மகள்!

தன் உடம்பிறந்த தம்பியை தனது தந்தையே தூக்கில் தொங்கவிட்ட கொடூர காட்சியை அவரது மகள் மொபைல் போனில் வீடியோ எடுத்த சம்பவம் ஒன்று பெங்களூர் அருகே நடந்துள்ளது.

'தனுஷ் 35' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு படங்களை தயாரித்து வருகிறது என்பதும்

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் கடந்த மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

பேட்மிண்டன் வீராங்கனையுடன் நெருக்கமாக உள்ள விஷ்ணுவிஷால்!

நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.