சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படத்தின் டைட்டில் இதுவா? 

  • IndiaGlitz, [Thursday,May 19 2022]

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையதளங்களில் கசிந்தது வைரலாகி வருகிறது .

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது .

இந்த நிலையில் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு ’மாவீரன்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் .

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் திரையுலகப் பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பலரும் ராணுவ வீரர்கள் கேரக்டரில் நடித்து இருக்கும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.