சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.. மீண்டும் ரூ.100 கோடி படத்தை கொடுப்பாரா?

  • IndiaGlitz, [Tuesday,May 14 2024]

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான ’டான்’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும் வசனம் எழுதும் பணி மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’டான்’ திரைப்படத்தின் மூலம் சிபி சக்கரவர்த்தி இயக்குனராக அறிமுகமான நிலையில் அந்த படம் 100 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் சிபிச் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இணையும் இந்த படமும் 100 கோடி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்.கே 23’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் சிபி சக்கரவர்த்தி படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.