சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அசோக் சக்ரா விருது பெற்ற பிரபலத்தின் வாழ்க்கை வரலாறா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகளை கொன்றதற்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான அசோக சக்கரம் என்ற விருது மரணத்திற்கு பின்னர் இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முகுந்த் வரதராஜன் அவர்கள் ராணுவத்தில் இருந்த போது நடந்த முக்கியமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் சிவகார்த்திகேயன் நடித்துவரும் எஸ்கே 21’ படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் தான் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments