சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியா? மீண்டும் இணையும் சக்சஸ் கூட்டணி..!

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் மீண்டும் அவருடன் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான ’டான்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

'டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த நிலையில் இந்த புதிய திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் அதுமட்டுமின்றி 'டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த எஸ்ஜே சூர்யாவும் இந்த படத்தில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 'டான்’ திரைப்படத்தில் இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைப்பார் என்று கூறப்படுவதால் நாயகி தவிர 'டான்’ திரைப்படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ படத்தை முடித்தவுடன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

 

More News

என் மகன் சினிமாவுக்கு வந்தால் முதலில் இதைத்தான் சொல்வேன்: 'இந்தியன் 2' விழாவில் அட்லி..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2' படத்தின் புரமோஷன் விழா நேற்று மும்பையில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லி,

விறுவிறுப்பான முன்பதிவு.. முதல் நாள் வசூல் எவ்வளவு ஆகும்? ரூ.1000 கோடியை நெருங்குமா 'கல்கி 2898 ஏடி'?

பிரபாஸ் நடிப்பில் உருவான 'கல்கி 2898 ஏடி'  திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும்

விஷ்ணுவர்தன் - அதிதி ஷங்கர் படத்தின் டைட்டில் இதுதான்: வீடியோவுடன் வெளியான அறிவிப்பு..

ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் திரைப்படத்தை கடந்த சில மாதங்களாக பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது 2வது சுதந்திர போர்.. காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: 'இந்தியன் 2' டிரைலர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான டிரைலர்

தமிழில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கிளைமாக்ஸ்.. தெலுங்கு 'எதிர்நீச்சல்' முடிவு என்ன?

சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலின் தெலுங்கு பதிப்பும் இந்த வாரம் முடிவடைந்துள்ளது. ஆனால் தமிழைப் போல் இல்லாமல்